செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009
பாலுணர்வு உந்துதல் பெண்களுக்குத்தான் அதிகம்
பெண் என்றால் பேயும் இரங்கும்" என்பது பழமொழி. ஆனால் பெண்ணே, அதுவும் பெற்ற தாயே பேயானால்?இதுபோல் பெண்கள் weaker sex, அவர்களுக்கு ஆண்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற patriarchal மனப்பான்மையால் தான் (இதற்கு தக்கதொரு தமிழ்ச் சொல்லை அறியத்தாருங்கள்!) இன்றைக்கு பல பெண்களுக்கு " தாங்கள் என்ன வேணுமானாலும் செய்யலாம், எந்தவித குற்றங்களையும் புரியாம். நமக்கு எந்த தண்டனையும் கிட்டாது" என்ற மனப்பான்மை ஊறி, அதனால் மிகவும் திமிர் பிடித்தவர்களாக மாறி விட்டார்கள் என்பதுதான் நாம் நிதர்சனமாகக் காணும் கசப்பான உண்மை!நாள் தோறும் நிகழும் கள்ளக்காதலால் உந்தப்படும் கொலைகளைப் பற்றி எழுத பல வலைப் பதிவுகள் தேவை என்னும் நிலை தோன்றிவிட்டது. நாளிதழ்களில் கள்ளக் காதல்களை தெரியப்படுத்த தனி இதழ்களைத்தான் வெளியிடவேண்டும்.இயற்கையில் பாலுணர்வு உந்துதல் பெண்களுக்குத்தான் அதிகம் படைக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் அவர்கள் ருதுவான காலம் முதல் சினை முட்டை தயார் நிலையை எய்தும்போது இன விருத்திக்கான குறியீடுகளால் ஆண் விந்தணுவைத் தேடும். அப்போது அந்தப் பெண்ணுக்கு பாலுணர்வு மேலிடும். அப்போது பொங்கியெழும் அந்த இச்சையை கட்டுப் படுத்தி கணவன், மனைவி என்னும் குடும்ப அமைப்பின் அடிப்படையில் அதை ஒழுக்கமாக வகைப்படுத்துவது நம் பண்பாடும், சமூகக் கட்டமைப்பும்தான். ஆனால் தற்காலத்தில் பல பெண்ணியவாதிகளின் ஓயாத கூக்குரலால் உந்தப்படும் சமுதாய பண்பாட்டு மறுப்பாலும், ஊடகங்கள், சினிமா போன்ற சாதனங்கள் மூலம் நடக்கும் போதனைகளாலும் நம் சமுதாய, கலாசார விழுமியங்கள் சிதைந்து சீரழிந்த காரணத்தால்தன் கள்ளக்காதல் கொலைகள் பெருகி விட்டன."டை" அடித்த கிராப் தலையும், லிப்ஸ்டிக்குமாக கால் மேல் கால் போட்டு, ஏர் கண்டிஷன் அறைகளில் அமர்ந்து கொண்டு, "ஏழைப் பெண்களை முன்னேற்றுகிறோம்" என்று அறை கூவும் பெண்ணிய வாதிகள் தங்கள் நுணி நாக்கால் பேசும் ஆங்கிலத்தில் சொல்லும் அறிவுரைகள் எல்லாமே:"ஏ இந்தியப் பெண்களே! கற்பு, கலாசாரம், பண்பாடு என்று சொல்லியே நம்மை காலங்காலமாக சிறைப் படுத்தி விட்டனர் இந்த ஆண்கள். அவைகளை சுக்கு நூறாக கட்டுடையுங்கள். மனம் போனபடி வாழுங்கள். நாங்கள் இருக்கிறோம் உங்களுக்குத் துணையாக. நம் சட்டங்கள் இருக்கின்றன. நீங்கள் கள்ளக் காதலுக்காக கணவனையும் ஏன், உங்கள் பெற்றோர்களையும் மற்றும் நீங்கள் பெற்ற பச்சிளம் பாலகர்களையும் கூட ஈவு இரக்கமின்றிக் கொன்று போட்டால் உடனே நாங்கள் 'கள்ளக் காதல் என்னும் சொல்லாட்சி தவறு. பெண்கள் கொன்றாலும் அவர்கள் பேதைகள். அவர்களை அவ்வாறு தங்கள் குழந்தைகளையே கொல்லத் தூண்டும் வகையில் நடந்து கொண்ட இந்த ஆண் சமுதாயத்தின் மேல் தான் தவறு' என்று அறிக்கை கொடுப்போம். நீங்கள் நடத்துங்கள்" - இந்த வகையில்தான் இருக்கும்!கடந்த சில நாட்களில் செய்திதாளில் வெளிவந்துள்ள கள்ளக் காதல் நிகழ்வுகளும் அதில் ஈடுபட்ட தாய்மார்களின் ஈவு இரக்கமற்ற நடத்தைகளும் படிப்பவர் மனத்தில் மிகுந்த கவலையை அளிக்கும் என்பது திண்ணம். அதுவும் தன் குழந்தைகளை நடுத்தெருவில் தவிக்க விட்டு கள்ளக் காதலனுடன் ஓடியுள்ள அந்தத் தாய்க்குலத் திலகத்தின் விவரம் உங்கள் மனத்தை மிகவும் கிலேசப்படுத்தும்.மனதை திடப்படுத்திக்கொண்டு செய்திகளை வாசியுங்கள்:முறையற்ற உறவால் தொடரும் விபரீதம்!கள்ளக்காதலனுடன் தாய் ஓடியதால் நடுவழியில் தவித்த 2 குழந்தைகள்ஊர் மக்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்குழித்துறை, ஆக.10- 2009கள்ளக்காதலனுடன் தாய் ஓடியதால் அனாதையாக நடுவழியில் தவித்த 2 குழந்தைகளை பொது மக்கள் போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.மனித மான்பை கெடுக்கும் கள்ளக்காதலால் நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-2 குழந்தைகளின் தாய்மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமாரி என்ற பாப்பா (வயது 30). இவருக்கு திருமணமாகி கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். மூத்த மகள் சால்மா (7) 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். 2-வது மகன் சானு (6) ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.இந்த நிலையில் வசந்த குமாரிக்கும், அதே பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ டிரைவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வசந்தகுமாரி முதல் கணவரை விட்டு விட்டு 2 குழந்தைகளு டன் ஆட்டோ டிரைவருடன் ஓடிச்சென்றாள்.இவர்கள் இருவரும் மத்தி கோடு என்ற இடத்தில் ஒரு வாடகை வீட்டில் 2 குழந்தை களுடன் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.2-வது கள்ளக்காதல்இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள வேறு ஒருவருடன் வசந்தகுமாரிக்கு தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று வசந்த குமாரி 2 குழந்தைகளையும், ஆட்டோ டிரைவராகிய கள்ளக்காதலனையும் விட்டு விட்டு 2-வது கள்ளக்காதலனுடன் ஓடிப்போய் விட்டதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் 2 குழந்தைகளையும் நேற்று முன்தினம் மார்த்தாண்டம் அருகே உள்ள சிராயன்குழி நுள்ளிவிளை என்ற இடத்தில் விட்டு விட்டு தலைமறை வானார்.நடுவழியில் பரிதவிப்புதாய்-தந்தை உயிரோடு இருந்தும் அனாதைகளாக தள்ளப்பட்ட 2 குழந்தைகளும் ஆதரவின்றி நடுவழியில் நின்று கதறி அழுதன. இதை பார்த்த அந்த ஊர் மக்கள் மனதிரங்கி குழந்தைகளை குழித்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் குழந்தைகளை ஏற்றுக்கொண்டு ஓடி போன வசந்தகுமாரி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.================ராமநத்தம் அருகே கள்ளக்காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்திட்டக்குடி,ஆக.10- 2009ராமநத்தம் அருகே கள்ளக்காதலனுடன் சென்ற 2குழந்தைகளின் தாயை போலீசார் தேடிவருகிறார்கள்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-திருமணமாகி 9 ஆண்டுகள்ராமநத்தத்தை அடுத்த ஆவட்டியை சேர்ந்தவர் வெள்ளிவேல். விவசாயி. இவரது மனைவி அம்புரோஸ்(வயது27). திருமணமாகி 9 ஆண்டுகள்ஆகின்றன. இவர்களுக்கு ஆகாஷ்(5), அபிஷேக்(11/2) என்ற இரு மகன்கள் உள்ளனர்.இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் காமராஜ். இவரது மகன் பிரதிவிராஜ் (22). இவர் வெள்ளிவேலுக்கு உறவினர் ஆவார்.கள்ளக்காதலனுடன் ஓட்டம்அம்புரோசுக்கும் பிரதிவிராஜவக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதியில் இருந்து பிரதிவிராஜ், அம்புரோஸ் ஆகியோர் அம்புரோசின் 11/2 வயதுகுழந்தையுடன் காணவில்லை. அம்புரோசின் வீட்டில் இருந்த18 பவுன் தங்கநகை மற்றும் ரூ.65ஆயிரம் ரொக்கப்பணத்துடன் அவர்கள் ஓடிவிட்டது தெரியவந்தது.போலீசில் புகார்இது குறித்து ராமநத்தம் போலீசில் வெள்ளிவேல் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து,விசாரணை நடத்திவருகிறார்.===================ஓடும் ரெயில்முன் பாய்ந்து 2 குழந்தைகளின் தாய் கள்ளக்காதலனுடன் தற்கொலைதிருவனந்தபுரம், ஆக.6- 2009ஓடும் ரெயில்முன் பாய்ந்து 2 குழந்தைகளின் தாய், கள்ளக்காதலனுடன் தற்கொலை செய்து கொண்டார்.குடும்பம்வெஞ்ஞாரமூடு அருகே உள்ள பிரப்பன்கோடு பகுதி யைச் சேர்ந்தவர் கோபன். ரப்பர் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி கிரிஜா (வயது35). இவர்களுக்கு கோபிகா, கோகுல் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் தீப குமார் (வயது28). கட்டுமான தொழி லாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.உறவினர் என்பதால் தீபகுமார் அடிக்கடி கிரிஜா வீட்டுக்குச் சென்று அவருடன் பழகி வந்தார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறிய தாக தெரிகிறது. இருவரும் தங்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் பல நாட்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர்.இது பற்றி வெளியே தெரியவந்ததும், அவர்கள் இருவரையும் அவரவர் குடும்பத்தினர் கண்டித்தனர்.தற்கொலைஇதனால் மனம் உடைந்த தீபகுமாரும், கிரிஜாவும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி கடைக்காவூர் ரெயில் நிலையம் அருகே உள்ள கொச்சுபாலம் சென்றனர். அப்போது அந்த வழியாக கொல்லத்தில் இரு ந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த ஐலண்டு எக்ஸ்பிரஸ் ரெயில் முன் அவர்கள் இருவரும் பாய்ந்தனர். இதில் அவர்கள் உடல் சிதறி அதே இடத்தில் பலியாகினர்.இது பற்றி அறிந்ததும் கடைக்காவூர் போலீசார் அங்கு விரைந்து சென்று, இருவரின் பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.(செய்தி: நன்றி - தினத்தந்தி)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கொடுமைடா சாமீ
பதிலளிநீக்கு