திருவண்ணாமலை அடுத்த சின்னகாங்கேயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி கலா. சத்திய மூர்த்திக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்தது. இதை மனைவி கலா கண்டித்து வந்தார்.
ஆனால் சத்தியமூர்த்தி கள்ளத்தொடர்பை கைவிட வில்லை. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கலாவை சத்தியமூர்த்தியும், அவரது தாய் பூங்காவனமும் சித்ர வதை செய்தனர்.
இது குறித்து கலா திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக் குப்பதிவு செய்து சத்திய மூர்த்தி கைது செய்தனர்.
பெரம்பூர், ஆக. 2-
செம்பியம் சங்கரமடம் தெருவை சேர்ந்தவர் சுகுமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இன்று செம்பியம் போலீசில் சுகுமார் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
எனது மனைவி அமுதா ராஜகுமாரி (32). எங்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள், எழும்பூரில் உள்ள கூரியர் சர்வீஸ் நிலையத்தில் அமுதா வேலைக்கு சென்று வந்தாள். தினமும் இரவில் வீட்டுக்கு தாமதமாக வரு வாள். அவளுடைய நடத்தையிலும் சந்தேகம் ஏற்பட்டது. அது பற்றி கேட்டதால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அவளுக்கு தெரியாமல் எழும்பூர் கூரியர் நிறுவனத்தில் சென்று விசாரித்தேன். அப்போது தான் 45 நாட் களாக அவள் வேலைக்கு செல்ல வில்லை என்பது தெரிய வந்தது.
அவள் எங்கு செல்கிறாள் என்று நேற்று முன்தினம் பின் தொடர்ந்து சென்று கண்காணித்தேன்.
ஆயிரம் விளக்கில் ஒரு வீட்டுக்குள் சென்றாள். அந்த வீட்டில் இருந்த அன்புமணி ஜேம்ஸ் என் பவருடன் கள்ளக்காதல் இருந்துள் ளது. இருவரும் ஊர் சுற்றி இருக்கிறார்கள். ஆத்திர மடைந்து வீட்டுக்குள் புகுந்து கண்டித்தேன். கையும், களவு மாக மாட்டியதும் என்னை தள்ளி விட்டு விட்டு இரு வரும் ஓடி விட்டனர்.
3 குழந்தைகளையும் வீட்டில் இருந்து அழைத்து சென்று விட்டாள். என் குழந்தைகளை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
விருத்தாகலம் அருகே ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மாணவன் சுரேஷ் கொல்லப்பட்டான். பெரம்பலூர் அருகே வயலப்பாடி ஏரியில் சுரேஷ் பிணம் மீட்கப்பட்டது. அவனை கொன்று சாக்குமூட்டையில் வீசியதாக கள்ளக்காதல் ஜோடி சுந்தர்ராஜன்- பாலாயி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மாணவன் சுரேசை கொன்றது எப்படி என்று பாலாயி போலீசில் கூறியிருப்பதாவது:-
என்கணவர் புகழேந்தி வெளிநாட்டில் உள்ளார். திருச்சி சமயபுரத்தை சேர்ந்த பொக்லைன் எந்திரம் ஓட்டும் சுந்தர்ராஜன் எனது சொந்த ஊரான திட்டக்குடி அருகே உள்ள கூடலூருக்கு அடிக்கடி வந்தார். அப்போது எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த என் கணவர் என்னை விரட்டிவிட்டார்.
பின்னர் நானும் சுந்தர்ராஜனும் பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் பகுதியில் தனியாக வாடகை வீடு எடுத்து வசித்து வந்தோம். செலவுக்கு பணம் தேவைப்பட்டது. பணம் இல்லாமல் கஷ்டப்பட்டோம்.
எனது ஊரைச்சேர்ந்த மகேஸ்வரியை கார்கூடலில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். அவரது கணவர் வெளிநாட்டில் வசதியாக உள்ளார். எனவே அவரது மகன் சுரேசை கடத்தி பணம் கேட்டால் பணம் கிடைக்கும் என்று சுந்தர்ராஜனிடம் நான் கூறினேன்.
அதன் பேரில் பள்ளியில் இருந்து திரும்பி வந்த சுரேசை நானும் சுந்தர்ராஜனும் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றோம். நாங்கள் ஏற்கனவே சுரேசுக்கு பழக்கமானவர்கள் என்பதால் எங்களை யாரும் சந்தேகப்படவில்லை.
சுந்தர்ராஜனை சுரேஷ் அங்கிள் அங்கிள் என்று பாசமாக கூப்பிடுவான். சுரேசின் தாத்தாவிற்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி அவனை ஏமாற்றி அழைத்து சென்றோம். மோட்டார் சைக்கிளில் 3 நாட்களாக திட்டக்குடி, அரியலூர் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து சென்றோம். அரியலூரில் சாப்பாடு வாங்கி கொடுத் தோம். டெலிபோனில் சுரேசின் தாய் மகேஸ்வரியிடம் பேசி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டினோம்.
இந்த நிலையில் போலீசார் எங்களை தேடுவதை அறிந்ததும் பயந்து விட்டோம். சுரேசும் தன்னை விட்டு விடும்படி கெஞ்சினான். அவனை வெளியே விட்டால் எங்களை பற்றி சொல்லி விடுவான் என்று பயந்தோம். எனவே வயலப்பாடி ஏரிக்கரைக்கு அழைத்து சென்றோம். அப்போது மழை பெய்தது. சுரேசை நாங்கள் மடக்கிப்பிடித்து சாக்குமூட்டையில் கட்டி ஏரியில் வீசினோம். அவன் இறந்து விட்டான். இனி போலீஸ் கேட்டாலும் தெரியாது என்று சொல்லி விடலாம் என்று நினைத்தோம்.
ஆனால் போலீசார் எங்களை பிடித்து விட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுந்தர்ராஜன் போலீசில் கூறும்போது, பாலாயி கொடுத்த திட்டத்தின் படி சுரேசை கடத்தினோம். லட்சக் கணக்கில் பணம் கிடைக்கும் என்று கடத்தினோம். பணத்தாசையால் தவறு செய்துவிட்டோம் என்றார்.
கைதான 2 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பூர், ஜூலை. 30-
போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், இணை போலீஸ் கமிஷனர் சேஷசாயி மேற்பார்வையில் புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை, பூக்கடை பகுதியில் போலீசார் தினமும் விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓட்டேரி பகுதியில் நேற்று இரவு துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் உதவி கமிஷனர் சந்திரன், இன்ஸ்பெக்டர் குழந்தை வேல், சப்- இன்ஸ்பெக்டர் தேவராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 3 மணி அளவில் ஓட்டேரி சின்னதம்பி தெருவில் பச்சிளம் குழந்தையின், அழுகை சத்தம் கேட்டது.
போலீசார் வண்டியை நிறுத்தி பார்த்தபோது, சாலையோரத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை ரத்தக்கறையுடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட நேரம் அழுததால் குழந்தைக்கு மூச்சு அடைப்பு ஏற்பட்டது.
அந்த குழந்தையை மீட்ட போலீசார் அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து முதல் உதவி சிகிச்சை அளித்தனர். டாக்டர் லூர்து தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றினர்.
பச்சிளம் குழந்தையை தெருவில் வீசிய யார் என போலீசார் விசாரித்தனர். விசாரணையில், குழந்தையை தெருவில் வீசியது அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்த செல்வி (வயது 20) என்பது தெரிய வந்தது.
செல்விக்கும், மஜித் என்ற வாலிபருக்கும் காதல் இருந்து வந்தது எல்லை மீறியதால் செல்வி கர்ப்பமானார். ஆனால் மஜீத் அவரை திருமணம் செய்ய மறுத்து தலைமறைவாகிவிட்டார். அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் கூறப்படுகிறது.
எனவே திருமணமாகாமலேயே செல்விக்கு குழந்தை இருந்தால் ஊரார் தவறாக பேசுவார்கள் என்பதால், குழந்தையை தெருவில் வீசியதாக செல்வியும் அவரது தாய் குமாரியும் ஒப்புக்கொண்டனர். மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையை தாயிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
விளாத்திகுளம் அடுத்த நாகலாபுரம் பஜனை மட தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 30). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரி(25). இவர் களுடைய மகள் புனிதா(2).
மாரீஸ்வரி சித்தாள் வேலைக்கு சென்று வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் காத்தாரிமுத்துவுக்கும் (43), மாரீஸ்வரிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதனையறிந்த முருகன் மனைவியை கண்டித்தார். ஆனால் மாரீஸ்வரி திருந்த வில்லை. ஏற்கனவே திருமணமான காத்தாரி முத்துவுடன் கள்ளக்காதல் நீடித்தது.
அதையடுத்து மாரீஸ்வரி கடந்த 3 மாதத்துக்கு முன்பு மகள் புனிதாவை தன்னுடன் அழைத்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காத்தாரிமுத்துவுடன் சேர்ந்து தனிக்குடித்தனம் நடத்த தொடங்கினார்.
குழந்தை புனிதா அடிக்கடி அழுதது உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக கள்ளக்காதல் ஜோடி கருதியது. இதனால் 2 பேரும் அடிக்கடி புனிதாவை அடித்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மயங்கிய நிலையில் காணப்பட்ட புனிதாவை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கள்ளக்காதல் ஜோடி கொண்டு சென்றது.
குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினார்கள்.
இதுகுறித்து நாகலாபுரம் கிராம நிர்வாக அதிகாரி சந்தனமாரி அளித்த புகாரின் பேரில் குழந்தை மர்மமாக இறந்ததாக விளாத்திகுளம் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குழந்தை புனிதா வின் உடல் பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முடிவில் உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதாக கருதி காத்தாரிமுத்துவும், மாரீஸ்வரியும் சேர்ந்து புனிதா வை அடித்து சித்ரவதை செய்ததும், அதில் குழந்தை இறந்ததும் தெரிய வந்தது.
அதன் பேரில் காத்தாரி முத்து, மாரீஸ்வரி ஆகியோர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவர் களை கைது செய்தனர்.
உல்லாச வெறியில் 2 வயது குழந்தையை கள்ளக்காதல் ஜோடி அடித்துக் கொன்ற சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் ஸ்டெல்லா (வயது 43).தலைமை ஆசிரியை. இவரது கணவர் பிரேமானந்த் ராணுவ வீரர். இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து ஸ்டெல்லா தனியாக வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையே ஸ்டெல்லா திருவாரூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். பள்ளம கோவில் என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து விக்கிரபாண்டியம் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
விக்கிரபாண்டியத்தை அடுத்த ஆலத்தூரை சேர்ந்தவர் பக்கிரிசாமி (39) இவர் ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளராக உள்ளார். திருமணமாகி இவருக்கு 2 ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையே தலைமை ஆசிரியை ஸ்டெல் லாவுக்கும் அ.தி.மு.க. பிரமுகர் பக்கிரிசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் தலைமை ஆசிரியை ஸ்டெல்லா பள்ளம கோவில் பகுதியிலேயே ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வீட்டை சொந்தமாக வாங்கினார்.
இதுபற்றி தெரியவந்ததும் பக்கிரிசாமி அந்த வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்றார். தொடர்ந்து தினமும் அதேபோல் வற்புறுத்தி வந்தார்.
சம்பவத்தன்று பக்கிரி சாமி, தலைமை ஆசிரியை ஸ்டெல்லாவிடம் சென்று நீ எனக்கு வீட்டை எழுதி வைக்கவில்லை என்றால் உன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்துபோன தலைமை ஆசிரியை ஸ்டெல்லா திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தார்.
இதுகுறித்து திருத்துறைப் பூண்டி டி.எஸ்.பி. பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அவர் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் இருவரையும் விசாரணைக்கு அழைத்தார்.
இதையடுத்து தலைமை ஆசிரியை ஸ்டெல்லா, தனது தங்கை மற்றும் தங்கையின் கணவருடன் கோட்டூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு வந்திருந்த பக்கிரிசாமி போலீஸ் நிலையம் முன் வைத்தே தலைமை ஆசிரியை ஸ்டெல்லாவை தாக்கியுள்ளார்.
புகாரின்பேரில் கோட்டூர் இன்ஸ்பெக்டர் பிச்சையா, எஸ்.ஐ. சந்தனமேரி ஆகியோர் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க. பிரமுகர் பக்கிரிசாமியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக