அந்தியூர்:
பள்ளி நேரத்தில் டாஸ்மாக் கடைக்குச் சென்று குடித்துவிட்டு கலாட்டா செய்த நான்கு மாணவர்கள் நீக்கப்பட்டனர்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஒலகடம் கிராமத்தில் உள்ளது அரசு மேல் நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் ஒலகடம், வெள்ளித்திருப்பூர், மாக்கல்லூர், பட்லூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.இப் பள்ளியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் காந்தி சிலை அருகே டாஸ்மாக் மதுக் கடை உள்ளது.இப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் சிலம்பரசன், ரமேஷ், ஸ்ரீதர், பிளஸ் 1 படிக்கும் மூர்த்தி ஆகியோர் பள்ளி நேரத்தில் இந்த கடைக்கு, பள்ளிச் சீருடையிலே சென்ற மதுஅருந்தியுள்ளனர்.போதை தலைக்கேறிய மாணவர்கள் நால்வரும், கடை வாசலில் உளறி கூச்சல் போட்டனர். இதை கண்ட அப்பகுதி பொது மக்கள், அவர்களை பிடித்து பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர்.பள்ளி வாயிலில் பொதுமக்கள் ஏராளமாக கூடிவிட்டனர். மாணவர்களை விசாரித்த தலைமையாசிரியர் ஜெயந்தி, நால்வரையும் உடனடியாக பள்ளியை விட்டு நீக்கினார்.அத்துடன், பள்ளி நேரத்தில் தம் அடித்ததாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஆறு பேர் பள்ளியை விட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக