தென் மாவட்டங்களில் உள்ள 85 ஊராட்சிகளில், தலித்துகள் “கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றார்களா என்றொரு ஆய்வை "எவிடன்ஸ்' என்ற அமைப்பு மேற்கொண்டது. அதன்படி, 69 கோயில்களில் நுழைய தலித்துகளுக்கு அனுமதி இல்லை; பிற 72 கோயில்களில் அவர்களுக்கு அனுமதி இருந்தாலும், அக்கோயில்களில் உள்ள பொது வழிபாட்டுக்குரிய இடங்களில் நின்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 33 கோயில்களில் தலித்துகளுக்கு கோயில் தேரை இழுக்க உரிமை மறுக்கப்பட்டுள்ளது. 54 கோயில்களைச் சேர்ந்த "தர்மகர்த்தாக்கள்' கோயில் தேரை தலித் தெருவுக்குள் அனுமதிப்பதில்லை. 64 கோயில்களில் திருவிழாக்களின் போது சடங்குகளை செய்யவோ, தங்களுடைய பண்பாட்டு நிகழ்வுகளை அரங்கேற்றவோ அனுமதி இல்லை. சுருக்கமாகச் சொன்னால், தலித் மக்களை ஒடுக்குவதற்கும், சாதி மோதல்களை வளர்த்தெடுப்பதற்குமான ஒரு களமாக இந்து கோயில்கள் விளங்குகின்றன என்றும், இதைத் தடுக்க அரசு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவான 3(1) (14) 1989 அய் பயன்படுத்தி, வழிபாட்டு உரிமைகளையும், கோயில் நுழைவை மறுப்பவர்களையும் தண்டிக்க வேண்டும் என்றும் ஆய்வை மேற்கொண்ட அமைப்பு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.மேற்கண்ட கள ஆய்வு தென் மாவட்டங்களில் எடுக்கப்பட்டவை. எனினும், வேறு திசைகளில் உள்ள மாவட்டங்களிலும் இதே போன்ற கள ஆய்வை செய்தால், கூடுதல் உண்மைகள் வெளிவரும். சாதிகளை உற்பத்தி செய்து, தீண்டாமையை கடைப்பிடித்து, ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், அதைப் புனிதமானதாக ஆக்கவுமே கோயில்கள் உருவாக்கப்பட்டன. இந்த நவீன யுகத்திலும் கோயில்கள் ஜனநாயகமாக்கப்படவில்லை என்பதை யார் மறுக்க முடியும்? அது மட்டுமா, அவை இன்றளவும் அரசால் பராமரிக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் எவ்வளவு பெரிய சட்டங்கள் இயற்றினாலும், அவை கோயில்களை என்ன செய்துவிடும்? இனவெறியைப் புனிதப்படுத்தும் கோயில்களுக்குள் நுழைய அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையை தலித்துகள் பரிசீலனை செய்ய வேண்டும். அந்த கேடுகெட்ட இடத்திற்குள் இனி எங்கள் கால் தடத்தைக் கூட பதிக்க மாட்டோம் என்று சொல்லத் துணிவதுதான் புரட்சியின் பாற்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பார்பனீயம் சாதியியத்தை வளர்த்து மனிதர்களிடம் பிரிவினை உண்டாக்குகிறது! கடவுள் என்பது கூட பார்பனீயத்தின் கண்டுபிடிப்பு தான், மனிதனின் மரண பயமே பார்பனியர்களுக்கு மனிதர்களை அடிமையாகவே வைத்திருக்கிறது!
பதிலளிநீக்கு