பரமக்குடி, ஆக. 2-
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ரெட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். அவரது மகள் நாகஜோதி (வயது 22). கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
பரமக்குடி படேல் தெருவை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். ஒரு தனியார் கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கண்களால் பேசிய அவர்கள் நாளடைவில் காதல் வயப்பட்டனர்.
இதனிடையே லட்சுமி நாராயணன் தனது காதலியிடம் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதி அளித்தார். இதனால் நாகஜோதி அவரது ஆசைக்கு இணங்கினார். இதன் விளைவாக 2 பேரும் அடிக்கடி பலமுறை உல்லாசமாக இருந்தனர்.
இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே லட்சுமிநாராயணன் தனது காதலியை கைகழுவ முயன்றார். இதனை கேள்விப்பட்ட நாகஜோதி பரமக்குடி டவுன் போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்வி, சரவணகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து லட்சுமி நாராயணனை கைது செய்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக