திங்கள், 3 ஆகஸ்ட், 2009

கடந்த மாதம் க்ரைம் ரிப்போர்ட்1

கடந்த மாதம் க்ரைம் ரிப்போர்ட் ஒரு பார்வை

Wednesday, 01 July, 2009


சென்னை, ஜூலை 1: சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவியை தலையணையால் அழுத்தி கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
.
செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 48). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் செம்மஞ்சேரி பகுதிக்கு வருவதற்கு முன் பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தாராம். குடிசை மாற்று வாரியம் மூலம் சுனாமி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்று செம்மஞ்சேரிக்கு குடியேறினார்.அண்ணாமலையின் முதல் மனைவி இறந்துவிட்டதால் இரண்டாவதாக கீதா (வயது 31) என்பவரை திருமணம் செய்தார்.இவர்களுக்கு இரண்டரை வயதில் மகனும், ஒன்றரை மற்றும் மூன்றுமாத பெண்குழந்தைகள் உள்ளது. அண்ணாமலை தன் மனைவி கீதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு பேசுவாராம். அத்துடன் இரவு நேரத்தில் குடித்துவிட்டு மனைவியுடன் சண்டையிடுவாராம்.இதே போல் நேற்றிரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த அண்ணாமலை மனைவி கீதாவிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இந்த சண்டையில் ஆவேசம் அடைந்த அண்ணாமலை அருகில் கிடைந்த தலையணையை எடுத்து கீதாவின் முகத்தில் அழுத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.பின்னர் அண்ணாமலை அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அக்கம்பக்கம் வசிப்பவர்கள் வீட்டினுள் சென்று பார்த்த போது கீதா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலை அப்பகுதி மக்கள் துரைப்பாக்கம் போலீசாருக்கு தெரிவித்தனர். உடனடியாக துரைப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் கவுதமன், சப்இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.தொடர்ந்து போலீசார் கீதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கப் பதிவு செய்து தலைமறைவான அண்ணாமலையை தேடி வருகின்றனர்



இன்டர்வியூ சென்ற பெண் கற்பழிப்பு


ஆவடி, ஜூலை 1: இன்டர்வியூவுக்கு சென்ற இளம்பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். ஆவடியை அடுத்த ஆரிக்கன்பேடு கிராமம் அருகே சாலையோரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆவடி போலீசில் புகார் கொடுத்தன் பேரில் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
.
விசாரணையில் வியாசர் பாடி சர்மாநகர், எஸ்.ஏ. முதல் தெருவைச் சேர்ந்த சங்கரின் மகள் ராதா (வயது 19) என்பது தெரிய வந்தது. இவர் பிளஸ் 2 முடித்து விட்டு அதே பகுதியில் ஒருகிளினிக்கில் டாக்டருக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று பேப்பரில் பார்த்துவிட்டு எழும்பூரில் உள்ள ஒரு அலுவலகத்திர்க்கு இன்டர்வியூக்கு செல்வதாக தனது தந்தையிடம் 100 ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். இரவு 10 மணி ஆகியும் மகள் வரதாததால் சங்கர், மகாகவி பாரதி நகர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் வேலை தேடி சென்ற பெண்ணை யாரோ மர்ம ஆசாமிகள் கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்துள்ளனர். இது பற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர், ஜூலை, 1: மனைவி மீது சந்தேகப்பட்டு மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
.
இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த வெப்பாலம் பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 31).ராணுவவீரரான இவர், கார்கில் பகுதியில் பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி தேவி (வயது 20). இவர்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து 2 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. கார்கில் பகுதியில் பணியாற்றி வந்த கோவிந்த சாமி ஒரு வாரம் விடுப்பில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.வந்ததிலிருந்து தேவியின் மீது சந்தேகப்பட்டு பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு தூங்கிகொண்டிருந்த தேவியின் மீது கெரசின் ஊற்றி பற்றவைத்துள்ளார் கோவிந்தசாமி. தேவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேவியை சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை தேவி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து வாணியம் பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவவீரர் கோவிந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

40 சவரன் கொள்ளை

சென்னை,ஜூலை 1: சென்னை ஜாபர்கான் பேட்டையில் முதியவரிடம் வருமான வரி அதிகாரி போல் நடித்து 40 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற டிப்டாப் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
.
சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள ராகவா காலனியில் வசித்து வருபவர் சீதாராமன் (வயது 86). இன்று காலை இவரது வீட்டுக்கு டிப்டாப் ஆசாமிகள் 2 பேர் வருகை வந்தனர்.வருமான வரி துறையிலிருந்து வருவதாக கூறிய அவர்கள் வீட்டில் சோதனை போட வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.சீதாராமன் புரியாமல் விழித்தார். அந்த இருவரும் வீட்டில் சோதனை நடத்தி பின்னர் பீரோ சாவியை கேட்டனர். பீரோவில் இருந்த 40 சவரன் நகையை எடுத்துக்கொண்டு வருமானவரி அலுவலகத்துக்கு வந்து கணக்கு காட்டிவிட்டு கணக்குகளை காட்டி விட்டு நகைகளை பெற்றுச் செல்லுமாறு அவர்கள் கூறினர்.பின்னர் இருவரும் மாயமாக மறைந்துவிட்டனர். அதிர்ச்சி அடைந்த சீதாராமன் தனது மகனுக்கு போன் செய்தார். அவரது மகன் வருமான வரி துறையில் இது பற்றி விசாரித்தபோது, அங்கிருந்து அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று தெரியவந்தது. இதனையடுத்து குமரன் நகர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Thursday, 02 July, 2009 12:19 PM
மாமனார் கொலை: மருமகன் தலைமறைவு

தாம்பரம், ஜூலை 2: தாம்பரம் அருகே கடப்பேரியில் மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகனை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரத்தை அடுத்த கடப்பேரி நேரு நகரில் வசித்தவர் ராமசாமி (வயது 64). இவரது மகள் மாலா. இவருக்கும் கார் டிரைவரான கிருஷ்ணமூர்த்தி (வயது 31) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
.
திருமணம் ஆன நாளிலிருந்து கிருஷ்ணமூர்த்தி வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தாராம். இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி மாலாவுடன் சண்டை போடுவாராம். அதேபோல் கடந்த மாதம் 14ந் தேதியும் கணவன், மனைவிக்குள் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.அப்போது கிருஷ்ணமூர்த்தி, மாமனார் ராமசாமியிடம் தங்கள் மகள் சண்டை போடுவதை தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறீர்களே என்று கூறி காய்கறி நறுக்கும் கத்தியால் ராமசாமியை குத்தினாராம். இதில் காயமடைந்த ராமசாமி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராமசாமி கீழே விழுந்து கல் குத்தியதில் காயம் ஏற்பட்டது என்று டாக்டர்களிடம் தெரிவித்தார்களாம்.இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராமசாமி சிகிச்சை பலனின்றி கடந்த 29ந் தேதி உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் கத்தியால் குத்தப் பட்டதால் கிட்னி பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், இதனால் காவல்துறை விசாரணை தேவை என்றும் தெரிவித்தனர்.இதையடுத்து தாம்பரம் போலீசார் மாலாவிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணை நடத்துவதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பூட்டை உடைத்து திருட்டு

சென்னை, ஜூலை 2: சென்னையில் வெவ்வேறு இடங்களில் பூட்டை உடைத்தும், வழிபறியிலும் பணம் கொள்ளை யடித்துச் சென்றுள்ளனர். அண்ணா பல்கலை ஆசிரியர் குடியிருப்பில் வசித்து வருபவர் கவுரிஸ்ரீ. இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
.
வழக்கம்போல் நேற்று கவுரிஸ்ரீ கல்லூரிக்கு சென்றுவிட்டார். வீட்டை பூட்டிச் சென்ற போது மாலை 3 மணியளவில் மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து திருடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வீட்டின் வேலைக்காரப் பெண் வந்த போது திருடர்கள் நடமாட்டத்தைக் கண்டு திருடன் திருடன் என்று சத்தம் போட்டார். அதைக் கேட்ட திருடர்கள் தப்பித்தால் போதும் என்று ஒரு மண் உண்டியலை மட்டும் எடுத்துச் சென்றனர். அந்த உண்டியில் ரூ.200 மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. வேலைக்கார பெண் போட்ட சத்தத்தினால் வீட்ல் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் நகைகள் தப்பித்தன என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோன்று மற்றொரு சம்பவத்தில் திருவான்மியூர் வால்மீகி நகரில் குடியிருக்கும் சாப்ட்வேர் என்ஜினியராக சீனிவாசன் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த சூட்கேசை திருடிச் சென்றுள்ளனர். அதில் இருந்து ரூ.300 ரொக்கம், ஒரிஜினால் சர்டிபிகேட் மற்றும் கேமரா போன்ற பொருட்கள் திருடு போனது. இதுகுறித்து திருவான்மியூர் விசாரித்து வருகின்றனர். மற்றொரு சம்பவத்தில் முகப்பேரை சேர்ந்த ஷீலா தாமஸ் பணிக்கு சென்று விட்டு நேற்று மாலை திருமங்கலத்தில் இருந்து முகப்பேருக்கு பஸ்சில் சென்றார். முகப்பேரில் இறங்கி பையை பார்த்த போது பையில் வைத்திருந்த ரூ. 30 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் பிளேடால் கிழித்து பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதுகுறித்து நொளம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Friday, 03 July, 2009 11:07 AM
அமெரிக்கா செல்ல முயன்ற வாலிபர் கைது!

சென்னை, ஜூலை 3: போலி ஆவணம் மூலம் அமெரிக்கா செல்ல முயன்றவர் மற்றும் அவருக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த 3 புரோக்கர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்தவர் உமேஷ் மாத்யூ (வயது 28). இவர் அமெரிக்கா செல்ல பிசினஸ் விசா கேட்டு அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பித்தார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இவரது ஆவணங்களை பரிசீலனை செய்த போது அவை போலி என்பது தெரியவந்தது.இதையடுத்து தூதரக அதிகாரிகள் இது குறித்து ராயப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். உமேஷ் மாத்யூவும் ஒப்படைக்கப்பட்டார். மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் மவுரியா மேற்பார்வையில் ராயப்பேட்டை உதவி கமிஷனர் சலேத்ராஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை யில் உமேஷ் மாத்யூவின் மனைவி அமெரிக்காவில் வேலை பார்ப்பதாக வும், தானும் அங்கு செல்ல வேண்டும் என்பதற்காக புரோக்கர்கள் மூலம் விசா பெற முயற்சித்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து உமேஷ் கொடுத்த தகவலின் பேரில் ராயப்பேட்டை போலீசார் போலி ஆவணங்கள் தயாரித்து வெளிநாடு செல்ல உதவிய கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஜோஷி மாத்யூ (வயது 51) மற்றும் சென்னை ஆயிரம் விளக்கை சேர்ந்த நைனார் தம்பி (வயது 42), ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த முகமது (வயது 33) ஆகிய 3 புரோக்கர்களையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெவ்வேறு இடங்களில் விபத்து

விழுப்புரம், ஜூலை3: விழுப்புரம் மாவட்டத்தில் 4 இடங்க ளில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் 5 பேர் பலியானார்கள்.திருவண்ணாமøலையைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் தன்னுடைய குடும் பத்துடன் வேனில் செஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். செஞ்சி அருகில் உள்ள சத்திய மங்கலம் வராகநதி ஆற்று பாலத்தின் அருகில் வேன் சென்று கொண்டு இருந்தது.
.
அப்போது அந்த வழியாக வந்த லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சுந்தரம் (வயது32), அவரது மனைவி உமா (வயது28), மகன் சிவா (வயது7). மகள் சுகுணா (வயது8) மற்றும் உறவினர் ஆறுமுகம் ஆகியோர் காயம் அடைந்தனர். உமா மற்றும் சிவா ஆகிய இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். மற்றவர்கள் செஞ்சி அரசு மருத்தவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இந்த விபத்து பற்றி சத்தியமங்கலம் போலீõசர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பு.மாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வையாபுரியின் மனைவி தங்கம் (வயது45). இவர் தனது கிராமத்தில் உள்ள ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியில் கட்டிட வேலை செய்து வந்தார். பண்ருட்டியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று கட்டிட வேலை செய்துகொண்டிருந்த தங்கம்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த தங்கம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.இந்த விபத்து தொடர்பாக உளுந்தூர் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அருகில் உள்ள கருங் காலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தியின் மகன் விஜயகுமார் (வயது26).இவர் திருக்கோவிலூரி லிருந்து விழுப்புரம் நோக்கி மோட் டார் சைக்கிளில் சென்று கொண்டிருந் தார். அப்போது காணை அருகில் எதிரே வந்த மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.இதில் விஜயகுமார் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அருகில் உள்ள திருவா மாத்தூரைச் சேர்ந்தவர் மண்ணாங் கட்டி. இவர் திருவாமாத்தூர் தேரடி வீதியில் நடந்து சென்றுகொண்டிருந் தார். அப்போது வந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று மண்ணாங்கட்டி மீது மோதியதாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த மண்ணாங்கட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பல னின்றி இறந்தார். இதுகுறித்து விழுப் புரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வேலை மோசடி: வாலிபர் கைது

சென்னை, ஜூலை 3: வேலை வாங்கி தருவதாக ஆந்திராவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம் பணம் வாங்கி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர்ராவ். கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் தி.நகர் நடேசன் தெருவில் உள்ள ஒரு விடுதியில் தங்கி வேலை தேடி கொண்டிருந்தார்.அப்போது அவரது ரூமுக்கு எதிர் அறையில் தங்கியிருந்த வெங்கடேசன் (வயது 38) என்பவர் அவரை அணுகி தான் ஒரு வக்கீல் என்றும் தனக்கு தெரிந்தவர்கள் பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளனர். சென்னையில் உள்ள பெரிய கட்டுமான நிறுவனத்தின் பெயரை கூறி அங்கு வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லி உள்ளார். வேலை வாங்கித்தர ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம் பணம் வாங்கியதாக கூறப் படுகிறது. ஆனால் வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து சிவசங்கர்ராவ் கொடுத்த புகாரின் பேரில் தி.நகர் போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் உதவி கமிஷனர் கண்ணபிரான் தலைமையில் மாம்பலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனிசெல்வம் விசாரணை நடத்தினார். விசாரணை யில் வெங்கடேசன் கனகம்மா சத்திரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்றும், ராயப்பேட்டை டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் வசிக்கிறார் என்பதும், சமீபத்தில் தான் வக்கீல் படிப்பை முடித்தார் என்பதும் வேலை வாங்கி தருவதாக சிவசங்கர்ராவ் ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்ததும் மேலும் பல பெண்களிடம் இதே போன்று மோசடி செய்ததும் தெரிய வந்தது. ஆனால் ஏமாந்த பெண்கள் யாரும் இதுவரை போலீசில் புகார் செய்யவில்லை. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக