நாகர்கோவில், ஆக.2-
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியைச்சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 21). இவர், உறவுக்கார பெண்ணான செல்வலட்சுமியை (18) காதலித்து வந்தார். செல்வ லட்சுமி, வள்ளியூரைச்சேர்ந்தவர். அங்குள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
உறவுக்காரர் என்ற முறையில் கிருஷ்ணன், செல்வலட்சுமி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது காதல் தீ அவர்களிடையே பற்றிக் கொண்டது. இவர்களது காதல் விவகாரம் செல்வ லட்சுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததும், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் செல்வலட்சுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்த்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடி நேற்று கேரள மாநிலம் பாறசாலை சென்று பதிவு திருமணம் செய்து கொண்டது. பின்னர் நேற்று மாலை அவர்கள் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கு வந்து தஞ்சம் புகுந்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து போலீசார் 2 பேருடைய பெற்றோரையும் அழைத்து சமரசம் செய் தனர். அவர்கள் காதல் ஜோடி சேர்ந்து வாழ சம்மதிப்பதாக தெரிவித்தனர். அதே சமயம் தற்போது ஆடி மாதம் நடக்கிறது. எனவே ஆடி மாதம் முடியட்டும், ஆவணியில் நாங்களே ஊரறிய திருமணம் செய்து சேர்த்து வைக்கிறோம் என தெரிவித்தனர். மேலும் போலீசாரிடம் எழுதியும் கொடுத்தனர்.
அதை காதல் ஜோடி ஏற்றுக்கொண்டு அவரவர் பெற்றோருடன் தனித்தனியாக பிரிந்து சென்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக