சனி, 1 ஆகஸ்ட், 2009

மாமனாரிடம் மாட்டிய மருமகள்

திருவெறும்பூர், ஜூலை.31-

திருவெறும்பூர் நியுடவுனை சேர்ந்தவர் கனகராஜ்(வயது64). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரேமா(54). இவர்கள் மகன் அகிலம் ஜெயசக்கரவர்த்தி(30). இவர் வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

அகிலகம் ஜெய சக்கரவர்த்திக்கும் நாகர் கோவில் பார்வதிபுரம் சிங்காரதோப்பை சேர்ந்த சுபா(26)வுக்கும் கடந்த 11.2.09 அன்று திருமணம் நடைபெற்றது. சுபாவின் தந்தை சண்முகம், தாய் ஆகியோர் ஆசிரியர்கள். திருமணத்தின் போது ரூ.3 லட்சம ரொக்கம், மற்றும் 40 பவுன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. மேலும் மாப்பிள்ளைக்கு தனியாக 10 பவுன் நகை கொடுத்து உள்ளனர்.

திருமணத்துக்கு பிறகு திருவெறும்பூரில் கணவர் வீட்டில் சுபா வசித்து வந்தார். அப்போது மாமனார் கனகராஜ், சுபாவை “செக்ஸ்” சித்தரவதை செய்து உள்ளார். இரவில் கணவருடன் படுக்கை அறையில் தூங்கும் போது கதவை திறந்து போட்டு விட்டு தான் தூங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

மேலும் சுபா உடைமாற்றும் போதும் கதவு திறந்துதான் இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுபா இதுபற்றி கணவரிடம் கூறி அழுதார். ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் அகிலம் ஜெயசக்கரவர்த்தியின் தம்பி செல்வம்(25). அடிக்கடி சுபாவிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார். வீட்டில் எல்லோரும் இருக்கும் போதே செல்வம் சுபாவின் இடுப்பு உள்பட பல இடங்களில் கிள்ளி அவரை அலற விட்டு உள்ளார்.

மேலும் மாமியார் பிரேமா ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தார். ஒரு பக்கம் செக்ஸ் சித்ரவதை, இன்னொரு பக்கம் வரதட்சணை கொடுமை கணவரோ இதை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நரகத்தில் வாழ்வது போல தவித்த சுபா கடந்த 25.3.09 அன்று தாய் வீட்டுக்கு சென்றார். பிறகு அங்கு இருந்து மதுரை கோர்ட்டில் கணவர், மாமனார், மாமியார் கணவரின் தம்பி ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு இது பற்றி வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசுக்கு உத்திரவிட்டது.

இதைத் தொடர்ந்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
1 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக