லூதியானா:
சீக்கிய குருத்வாராவில் ஆபாசப் படம் பார்த்த பூசாரியை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் பஞ்சாபில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.அந்த பூசாரி, ஆபாசப் படங்களை தனது மொபைல் போனில் ஸ்டோர் செய்து வைத்திருந்தார்.லூதியானாவில் உள்ளது ஜர் சஹாப் குருத்வாரா. இந்த கோவிலில் பூசாரியாக இருந்தவர் குர்பிரீத் சிங். இந்தக் கோவிலுக்கு ஒரு பக்தர் தரிசனத்திற்கு வந்தார்.அப்போது பூசாரி குர்பிரீத் சிங் சரியான முறையில் பூசை செய்யவில்லை. மாறாக அவரது கவனம் முழுவதும் அங்குள்ள ஒரு டேபிளுக்குக் கீழ்தான் இருந்ததாம்.இதைப் பார்த்த அந்த பக்தர், டேபிளை எட்டிப் பார்த்தபோது செல்போனில் ஆபாசப் படம் இருந்ததையும், அதைத்தான் பூசாரி மிகக் கவனமாக கவனித்துக் கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ந்து போனார்.அந்த டேபிளில்தான் சீக்கியர்களின் புனித நூலான ஆதிகிரந்தம் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளதாம்.இதையடுத்து தலைமை பூசாரி ஜஸ்பால் சிங்குக்கு தகவல் போனது. அவர் விரைந்து வந்து குர்பிரீத் சிங்கை கையும் களவுமாக பிடித்தார்.இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் குர்பிரீத் சிங் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக