திங்கள், 3 ஆகஸ்ட், 2009

காவிகள் பகையுணர்வின் வரலாறு

ஹிந்து மகாசபை மற்றும் ஆர்எஸ்எஸ்காரர்கள் இந்நாடு முழுதும் பற்பல இடங்களில் 'சரஸ்வதி சிசு மந்திர்' என்று பெயரிலும் 'வித்ய பாரதி பள்ளி' என்ற பெயரிலும் பள்ளிகள் நடத்தி வருகிறார்கள் என்பதை முதலில் நான் அறிந்திருக்கவில்லை. இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரிய ஆசிரியைகள் பணிபுரிவதுடன் இலட்சக்கணக்கில் மாணவர்களும் பயின்று வருகின்றனர். அவர்கள் தங்கள் பாடபுத்தகங்களை அச்சிட்டுக் கொள்ள சொந்தமாக வெளியீட்டு நிறுவனமும் வைத்துள்ளனர்.நமது நாட்டில் எவ்வளவு அதிகம் முடியுமோ அத்துனை பள்ளிகளும் பாடப் புத்தகங்களும் தேவையென்பதால் இப்பள்ளிகளைப் பற்றி அறிந்த போது நான் மகிழ்ந்தேன். ஆனால் அவர்கள் இந்தப் பள்ளிகளில் என்ன நடத்துகிறார்கள் என அறிந்த போது கடுமையான ஏமாற்றமடைந்தேன். நம்ப வைக்கப்படுகின்ற வெறும் வரலாற்றுக் கட்டுக்கதைகள். அந்தக் கட்டுக் கதைகளின் மூலம் நம் பழங்காலத்தைப் பற்றி அதிக மன உறுதியும், அதே சமயம் நம் நாட்டில் நம்மைப்போல் வரலாறு இல்லாத, ஆனால் இந்தியராகப் பிறந்த, முஸ்லீம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் எதிரான அவநம்பிக்கையையும் பகையுணர்வையும் வளர்த்தெடுப்பதையுமே செய்கின்றார்கள். முதன் முதலாக, அவர்கள் கல்வித் திட்டத்தில், பாரத வரலாறு ஆரிய வருகையுடன்தான் தொடங்கியதாக நம்ப வைக்கப்படுகிறது. நமது நாட்டின் தென்பகுதியில் ஆரியர்கள் முதன் முதலாக குடியேறும் முன்னரே இந்நாட்டின் பூர்விகக் குடிகளான திராவிடர்கள் வாழ்ந்திருந்த வரலாறு மறைக்கப்டுகிறது.யூத, ஜிப்சி இனத்தவரை கொட்டில்களில் அடைத்து, நச்சுக் காற்றை செலுத்திக் கொன்று, செமிட்டிக் இனத்தவரின் ஆரிய ஜெர்மனியை உருவாக்கிய அடால்ப் ஹிட்லர்தான் அவர்களது முன்மாதிரி. ஆனால் தற்போதைய ஜெர்மானியர்களே ஹிட்லரை பேய் அவதாரம் (Devil-incarnate) என எண்ணுவதோடு அவனை நினைந்து வெட்கித் தலை குனிகின்றார்கள். ஆர் எஸ் எஸ், சிவசேனைத் தலைவர்களுக்கோ அவன் புகழுக்குரிய உதாரண புருஷன். இணையத்தில் உலவும் சிலவற்றுக்கு யூதர்களும் முன்மாதிரிகள் அவர்களைக் கொன்ற ஹிட்லரும் முன்மாதிரி. என்ன கொடுமை!.அவர்களது பாடத் திட்டத்தின்படி பவுத்தமும் அதை விரிவு படுத்தி அஹிம்சையை போதித்த பேரரசர் அசோகனும் கொடூரமான நாசக்காரர்களாம். இவர்களால்தான் நம் இயல்பான போர்க்குணம் களவு போய் நாம் கோழைகளானோமாம். இதனால்தான் ஒரு கையில் வாளையும் மறு கையில் குர்ஆனையும் கொண்டு வந்த முஸ்லீம் படைகளை நாம் எதிர்க்க முடியாமல் போனோமாம் (மனநோய் பீடித்ததைப்போல் உளரும் கயவர்கள்). ஆர் எஸ் எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவர் கூற்றின்படி அசோகனும் பவுத்தமும் சீறி வரும் நச்சுப் பாம்புகளாம். அவர்களது பாடப்புத்தகத்திலிருந்து சில உதாரணங்கள்:1.முஸ்லீம்கள் மெக்காவில் அமைக்கப் பட்டிருக்கிற கருப்புக் கல்லாகிய சிவலிங்கத்தைத் தரிசனம் செய்ய பெரும் விருப்பம் கொண்டவர்கள். அட பைத்தியங்களே!.2.டெல்லியில் கட்டப்பட்டுள்ள குதுப்மினார், பேரரசர் சமுத்திர குப்தரால் கட்டப்பட்ட விஷ்ணு ஸ்தம்பா ஆகும். - அதன்மேல் குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்டு அழகு படுத்தப் பட்டுள்ளதைப் பற்றி ஏதும் சொல்ல மாட்டார்கள்.3.பாபரி மஸ்ஜித் எப்போதும் ஒரு பள்ளிவாயிலாகவே இருந்ததில்லை ஏனெனில் அங்கு எப்போதுமே தொழுகை நடைபெற்றதில்லை என்று வலியுறுத்துவார்கள். - இடிப்பதற்கு முன்னுள்ள அதன் நிழற்படத்தைப் பார்த்தாலே அதன் மூன்று கும்பாவும் மெக்கா நோக்கியுள்ள அதன் சுவர்களும் அது பள்ளிவாயில்தான் எனத் தெளிவு படுத்தும். இணையத்தில் பிதற்றித் திரியும் இத்தயைவர்களைக் கண்டு இனி அனுதாபம் கொள்ள முயற்சியுங்கள். அவர்கள் எங்கு கல்வி பயின்றனர் என்று அறிந்து கொள்ளுங்கள். சிறு வயதிலிருந்தே இவ்வாறு மூளைச்சலவை செய்யப் பட்டவர்களால் என்ன செய்ய இயலும். பாவம்.ஆர் எஸ் எஸ் தலைவர் சுதர்ஸனன் நவம்பர் 2001ல் வெளியிட்ட கருத்தில் சிறந்த வரலாற்றாய்வாளர்கள் எல்லாம் இந்துக்களுக்கு எதிரான ஐரோப்பிய இந்தியர்கள் என்றார். பழங்காலத்து இந்தியாவில் அணு சக்தியைப் பற்றிய அறிவிருந்தது என்பதாகவும் பரத்வாஜ முனிவரும் இராஜ போஜ் முனிவரும் ஆகாய விமானம் செய்வதைப் பற்றி விளக்கி இருப்பதோடு எத்தகைய விமானங்கள் எவ்வளவு உயரத்தில் பறக்கும் என்பது பற்றியெல்லாம் விளக்கி இருக்கின்றார்களாம். இவ்வாறு புனையப்பட்ட கட்டுக்கதைகள் யாவும் வாஜ்பாயியின் பாஜக ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷியின் உத்தரவின்படி வரலாறாக பதிவிக்கப்பட்டது. இந்த ஜோஷிதான் பல்கலை கழகங்களில் ஜோஸியத்தை தனிப்பாடப் பிரிவாக புகுத்தியவர். ஆனால் இவர் ஜாதகப்படி வெற்றிதான் என வலியுறுத்தப்பட்ட தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். இந்தப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் பாடங்களின்படி இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியின் பங்கு குறைவாக்கப்பட்டு வீர்சாவர்க்கரின் பங்கு உயர்த்திக் காட்டப்படுகிறது. மகாத்மா காந்தி கொலை வழக்கில் technical அடிப்படைகளில் இவர் விடுவிக்கப்பட்டிருந்தாலும் பின்னால் நீதிபதி கபூர் கமிஷனால் இவர்தான் கொலைக்கு முக்கிய தூண்டுகோலாக இருந்தவர் எனக் தெளிவுபடுத்தப் பட்டிருந்தார். பாஜக ஆட்சியின்போது இவர் சிலைதான் நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டது.நான் ஒரு பக்கச் சார்பாக பேசுவதாக உஙகளுக்குத தோன்றினால் JNU பல்ககைழகத்தின் முக்கிய மூன்று வரலாற்று பேராசிரியர்கள் ஆதித்யா முகர்ஜி, ம்ருதுலா முகர்ஜி, சுச்சிதா மஹாஜன் (Aditya Mukherjee, Mridula Mukherjee and Sucheta Mahajan) ஆகியவர்கள் தொகுத்த ஆர் எஸ் எஸ் பள்ளி பாடப்புத்தகமும் மகாத்மா காந்தியின் கொலையும் [booklet — RSS School Texts and the Murder of Mahatma Gandhi (Sage)] என்ற வெறும் 80 பக்கங்களுள்ள சிற்றேட்டை பார்வையிடுங்கள். அதில் அவர்கள் எடுத்தாண்ட ஒவ்வொரு மேற்கோளின் நம்பகத்தன்மையையும் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தி உள்ளனர். பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் இத்தகையை நஞ்சை விதைத்து, மற்றவர்களுக்கெதிராக பகைவெறியை ஊட்டி வளர்ப்பது நாட்டு நலனுக்கு உகந்ததா? ஒற்றுமையுள்ள இந்தியா என்ற நம் இன்பக் கனவுகளுக்கு எதிராக வன்முறையையும் உள்நாட்டுப் போரையும் நம் சந்ததிகளின் மூளையில் திணிக்க அனுமதிக்கலாமா? யோசியுங்கள்.ஏறக்குறைய இந்தியாவில் நடைபெறும் எல்லா தீவிரவாத நடவடிக்கைகளிலும் இத்தகைய மூளைச்சலவை செய்யப்பட்டவர்களின் பங்கு பற்றி சிந்திக்க வேண்டாமா?இத்தகைய எண்ண ஓட்டம் கொண்டவர்களையும், அதிலேயே தீவிரமானவர்களையும்தான் பாஜக ஆட்சியின் போது எல்லா முக்கிய நிர்வாக பொறுப்புகளிலும பதவிகளிலும் உள் நுழைத்து வைத்தார்கள். இவர்களிடமிருந்து நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியுமா? இதற்கான நல்லதொரு தீர்வைத் தேடி ஆக்கபூர்வமான வழியில் பயணிக்க வேண்டிய நேரமிது. குறைந்தது அவ்வழியில் சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லது நாட்டிற்கு நல்லதை விழைபவர்களுக்கான அவசியம்.(அமிர்தசரஸ் KJS அலுவாலியா என்பவரின் ஆக்கத்தைத் தழுவி எழுதியுள்ளேன்)
என் அருமை தோழர்களே நமது கடமையாக என்னி பார்க்க வேண்டும். நம் பிறப்பின் தன்மயை ஒருவன் தவ‌றாக சித்தரித்தால் அது நம் தாய்க்கும் நமக்கும் எவ்வளவு அவபெயரை கொடுக்கும் என்பதை, ஆங்கிலேயர்களின் பிரித்தாலும் கொள்கையை கொண்டு நம் நாடு நம் மக்கள் என்று இருந்த நம் திரவிட சமுதாயத்தை ஆரியர்கள் வந்து சுயமரியாதையை இழக்க வைய்த்து அதன் படி நம்மிடம் ஜாதி கொள்கையை உண்டுபண்ணி இன்றுவரை நம்மை நாம் யார் என்று அறியத வண்ணம் நம் உறவுகளுக்குள்ளே புகுந்து நமக்கே
கெடுதல் விளைவிக்கும் பாசிச வெறிபுடித்த கயவர்(காவி) கூட்டத்தை அதன் உண்மையான முகத்தை வெளிச்சத்திற்க்கு கொண்டுவந்து பாமர மக்களிடமும், படித்த சமுகத்திடமும் நம் திரவிட கொள்கையை நிலவிட நம்மால் முடிந்தவரை பாடுபடுவோம். இந்தியா ஜனநாயக நாடு இங்கு அவரவர் அவரது மதங்களின் கொள்கையின் படி வாழவும்,இந்தியாவின் உண்மையான வரலாற்றை அறியவும் முயற்ச்சினை மேற்க்கொள்ளோவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக