சென்னை காசிமேடு சிங்கார போர் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (30). கருவாடு வியாபாரி. இவரது மனைவி குப்பம் மாள் (26). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்களது வீட்டின் அருகே குப்பம்மாளின் தாய் முத்து லட்சுமியின் வீடு உள்ளது.
சுரேஷ்குமார் குடித்து விட்டு வந்தால் மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். குப்பம்மாள் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட் டிற்கு சென்று விடுவார். பின்னர் கணவன்-மனைவி இருவரையும் முத்துலட்சுமி சமாதானம் செய்து அனுப்பி வைப்பார். இது தொடர் கதையாகி வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வந்த சுரேஷ் மனைவி குப்பம்மாளுடன் தகராறு செய்தார். அவர்களுக்குள் வாக்கு வாதம் முற்றி கை கலப்பானது. சுரேஷ் தனது மனை வியை சரமாரியாக அடித்து உதைத்தார். வலி தாங்க முடியாமல் அவர் தனது தாய் வீட்டில் போய் பதுங்கி கொண்டார்.
மகள் அடிபடுவதை சகிக்க முடியாத முத்துலட்சுமி மரு மகன் சுரேசிடம் இது பற்றி தட்டிக் கேட்டார். இதனால் மாமியார் மருமகனிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சுரேஷ் வீட்டிற்கு சென்று கையில் அரிவாளை எடுத்து வந்தார்.
உடன் தம்பி அருண்குமாரையும் அழைத்து வந்தார். தெருவில் நின்ற மாமியார் முத்துலட்சுமி மீது ஆவேசமாக பாய்ந்த அவர்கள் முத்துலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக பலியானார்.
இதை தடுக்க வந்த மனைவி குப்பம்மாளையும் ஆவேசமாக வெட்டினார். அவருக்கு கழுத்தில் வெட்டு விழுந்தது. தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் திரண்டதால் சுரேஷ், அருண் ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். உயிருக்கு போராடிய குப்பம்மாளை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் காசிமேடு இன்ஸ் பெக்டர் சம்பத் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சுரேஷ் அவரது தம்பி அருண் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர். நேற்று நள்ளிரவு நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக