ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

கள்ளக்காதலனுடன் ஊர் சுற்றும் மனைவி

பெரம்பூர், ஆக. 2-

செம்பியம் சங்கரமடம் தெருவை சேர்ந்தவர் சுகுமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இன்று செம்பியம் போலீசில் சுகுமார் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

எனது மனைவி அமுதா ராஜகுமாரி (32). எங்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள், எழும்பூரில் உள்ள கூரியர் சர்வீஸ் நிலையத்தில் அமுதா வேலைக்கு சென்று வந்தாள். தினமும் இரவில் வீட்டுக்கு தாமதமாக வரு வாள். அவளுடைய நடத்தையிலும் சந்தேகம் ஏற்பட்டது. அது பற்றி கேட்டதால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அவளுக்கு தெரியாமல் எழும்பூர் கூரியர் நிறுவனத்தில் சென்று விசாரித்தேன். அப்போது தான் 45 நாட் களாக அவள் வேலைக்கு செல்ல வில்லை என்பது தெரிய வந்தது.

அவள் எங்கு செல்கிறாள் என்று நேற்று முன்தினம் பின் தொடர்ந்து சென்று கண்காணித்தேன்.

ஆயிரம் விளக்கில் ஒரு வீட்டுக்குள் சென்றாள். அந்த வீட்டில் இருந்த அன்புமணி ஜேம்ஸ் என் பவருடன் கள்ளக்காதல் இருந்துள் ளது. இருவரும் ஊர் சுற்றி இருக்கிறார்கள். ஆத்திர மடைந்து வீட்டுக்குள் புகுந்து கண்டித்தேன். கையும், களவு மாக மாட்டியதும் என்னை தள்ளி விட்டு விட்டு இரு வரும் ஓடி விட்டனர்.

3 குழந்தைகளையும் வீட்டில் இருந்து அழைத்து சென்று விட்டாள். என் குழந்தைகளை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார். போலீசார் விசாரித்து வருகிறார்கள்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக