வியாழன், 30 ஜூலை, 2009

க(ந)ள்ள காதல்

விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட ஏழு வயது பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளான். இது தொடர்பாக அவனது உறவினரான ஒரு பெண்ணும் அவரது கள்ளக் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.விருத்தாசலத்தை அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். இவரது மனைவி மகேஸ்வரி, இவர்களது மகன் சுரேஷ் (7).சுரேஷ் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளிக்கு வேனில் செல்வது வழக்கம்.இரு தினங்களுக்கு முன் சுரேஷ் பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் வழக்கமாக இறங்கும் இடத்தில் வேனில் இருந்து சுரேஷ் உள்பட 4 மாணவர்கள் இறங்கினர்.தனது வீடு நடந்து கொண்டிருந்த சுரேஷை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுரேசை கடத்திச் சென்றனர். மகன் வீடு திரும்பாததால் கம்மாபுரம் போலீசில் புகார் கொடுத்தார் மகேஸ்வரி.இந் நிலையில் நேற்று காலை மகேஸ்வரியின் செல்போனை தொடர்பு கொண்ட ஒருவன், சுரேஷை விடுவிக்க வேண்டுமானால் ரூ.5 லட்சம் தர வேண்டும். போலீசுக்குப் போனால் அவனை உயிரோடு பார்க்க முடியாது என்று மிரட்டினான்.இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து சுரேஷை மீட்கும் முயற்சிகளில் இறங்கினர்.கடந்த 2 நாட்களாக அடிக்கடி மகேஸ்வரியுடன் பேசிய மர்ம நபர் பணம் கேட்டு மிரட்டினான். அவன் பேசிய பொதுத் தொலைபேசிகள், செல்போன் நம்பர்களை வைத்து அந்த நபர் எங்கிருந்து பேசினான் என்பதை போலீசார் கண்டுபிடித்து பின் தொடர்ந்தனர்.முதலில் திட்டக்குடியில் உள்ள ஒரு காயின்பாக்ஸ் போனில் இருந்து அந்த நபர் பேசினான். இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணித்தனர்.அப்போது அந்த நபர் இருப்பிடத்தை மாற்றி ரூ.5 லட்சத்துடன் பெரம்பலூர் வருமாறு மகேஸ்வரியிடம் கூறினான். இதனால் மகேஸ்வரியும், தனிப்படை போலீசாரும் பெரம்பலூர் சென்றனர்.ஆனால் கடத்தல்காரனிடமிருந்து வேறு எந்தத் தகவலும் வரவில்லை. அதே நேரத்தில் மகேஸ்வரியின் உறவினரான பாலாயி என்பவரும் சுந்தரராஜன் என்ற அவரது கள்ளக் காதலனும் பெரம்பலூரில் சுற்றியபடி மகேஸ்வரியை கண்காணித்தனர்.இதைக் கண்டுபிடித்த போலீசார் அந்த இருவரையும் மடக்கினர். அவர்களிடம் விசாரித்தபோது சுரேசை கடத்தி கொலை செய்துவிட்டது தெரியவந்தது.சுரேஷை கொன்று சாக்குமூட்டையில் கட்டி பெரம்பலூர் அருகே உள்ள குண்டலம் ஏரியில் வீசியதாகத் தெரிவித்தனர்.இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் உடலை மீட்டனர்.உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு இரவோடு இரவாக சென்று பார்த்தனர். அங்கு ஏரிக்குள் மாணவன் பிணம் சாக்குமூட்டையில் கட்டப்பட்டு கிடந்தது. இரவு வெகுநேரமாகி விட்டதால் இன்று காலையில்தான் மாணவனின் பிணம் மீட்கப்பட்டது.தனது மகன் கொலை செய்யப்பட்டதை கேள்விப்பட்டு தாய் மகேஸ்வரி கதறி துடித்து அழுதார்.மாணவன் பிணத்தை அவர் அடையாளம் காட்டிய பின்பு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கள்ளக் காதலர்களான சுந்தராஜன் (25), பாலாயி (34) ஆகியோரிடம் போலீசார் விசாரித்தபோது,குடும்பம் நடத்த பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும் அப்போது சுரேஷின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் குடும்பத்துக்கு நிறைய பணம் அனுப்பது தெரியவந்ததால் சுரேஷைக் கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டதாகக் கூறினர்.ஆனால் போலீஸ் தங்களை நெருங்கிவிட்டது தெரியவந்ததால் சுரேஷை வெட்டிக்கொன்று பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசியதாகத் தெரிவித்தனர்

இவர்களது வெறிதனத்திற்க்கு ஒரு ஒன்றும் அறியத சிறுவனின் மரணமும் அவனது பெற்றொரின் துயரத்துக்கு இவர்கள்க்கு என்ன தண்டனையா கொடுபிங்க????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக